முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. டி.எஸ்.பி. கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பு

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.8 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் குண்டா டி.எஸ்.பி. ஜியா உல் ஹக் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து மத்திய அரசு இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துவிட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை 4 வழக்குகளை பதிவு செய்யும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு விசாரணை தொடங்கும். இந்த படுகொலை வழக்கில் 44 வயதான உத்திரப்பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜைபையாவின் பெயர் அடிபட்டதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார். இவர் குற்றப்பின்னணி உள்ளவர் என்றும் கடந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி பர்வீன் ஆசாத் கொடுத்த புகாரை அடுத்து ராஜாபையாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் பர்வீன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படியே டி.எஸ்.பி. படுகொலை வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு நிலத்தகராறு காரணமாக பிரதாப்ஹர் என்ற இடத்தில் ஒரு கிராம தலையாரி கொல்லப்பட்டார். அவரது சகோதரது சுரேஷூம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக்கேள்விப்பட்டதும் அங்கு விரைந்து டி.எஸ்.பி. ஜியா உல் ஹக்கை அங்கிருந்த கும்பல் படுகொலை செய்ததாம். இந்த வழக்கில்தான் ராஜாபையாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தூண்டுதல் காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 4 hours ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago