முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசியாபாத்தில் ஆட்டோவில் சென்ற மாணவி பலாத்காரம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

காசியாபாத், மார்ச். 8  - உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஆட்டோவில் சென்ற மாணவியை 3 பேர்  பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி போலீஸார் கூறியதாவது: இந்திரபுரத்தில் ஷிப்ரா மால் அருகே ஆட்டோவில் ஏறி ஒரு மாணவி சென்றார். அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், இந்த மாணவியிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அந்த கும்பல் பறித்துச் சென்றதும் பின்னர்தான் தெரியவந்தது. கலான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

தனது தோழியை பார்த்து பேசிவிட்டு வந்த மாணவி எப்போதும் போல் ஆட்டோவில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது அவர் அருகில் இருவர் பயணிகள் போல் நடித்து இந்த மாணவியின் அருகில் வந்து அமர்ந்துள்ளனர்.  பின்னர் அவர்கள் இருவரும் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதற்கு அந்த மாணவி தடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

பின்னர் அவர்கள் திடீரென யோசனை செய்து ஆட்டோ ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூறி ஆட்டோவை தோடா காலனி அருகே நிறுத்தயுள்ளனர். பின்னர் ஆட்டோ காசியாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. பிறகு கலன்ட் என்ற இடத்தில் ஆட்டோ நின்றது. ஆட்டோவில் இருந்த ஒருவன் கீழே இறங்கி மாணவியை இழுத்தான்.  அவர் வர மறுக்வே அவரை அடித்து உதைத்துள்ளான். பின்னர் அந்த மாணவியை அவனும், மற்றவர்களும் ன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு சுமார் 10 மணி அளவில் அந்த மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.   

பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.  இதன் பிறகு போலீஸார் தீவிர விசரணை நடத்தி அங்கிட், தபான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ திருடப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.   மாணவி மருத்துவசிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று போலீஸ் அதிகாரி ரன் விஜய் சிங் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago