முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க கடிதம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - தமிழக மீனவர்கள் மீது அராஜகங்கள் நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரமான வருத்தத்திற்குரிய நிகழ்ச்சி குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காரைக்காலில் இருந்து 10 பேரும், நாகப்பட்டினத்தில் இருந்து 4 பேரும் மொத்தம் 14 பேர் இரண்டு இயந்திர படகுகளில் மார்ச் 2-ம் தேதி பல நாட்கள் மீன் பிடிப்பதற்காக பயணம் செய்தார்கள். தமிழ்நாட்டின் கோடியக்கரை பகுதியில் தென்கிழக்கு கடலில் அவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த இலங்கை கடற்படை அதிகாரி மார்ச் 6-ம் தேதி இரவில் அவர்களுடைய படகுகள் மீது துப்பாக்கியால் சுட்டார். அதில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் படுகாயத்திற்கு ஆளானார். மற்ற மீனவர்கள் தங்களுடைய படகுகளில் காயம்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வந்து நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். 

அப்பாவி தமிழ்நாட்டின் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் அராஜகங்களை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை பெருங்கவலையுடன் உங்களிடம் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தூத்துக்குடியை சேர்ந்த 16 மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்கள் என்பதை நீங்கள் முன்பே அறிவீர்கள். இதற்கு மேலாக தற்போது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய நிகழ்ச்சி அமைதியாக வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும், பதட்டத்தையும் உண்டாக்குவதே நோக்கமாக தெரிகிறது. 

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய அராஜகங்கள் குறித்தும் சர்வதேச அரங்கில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் நடத்திய மாபெரும் கிளர்ச்சியே மேற்படி தாக்குதலுக்கு காரணம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. 

இந்திய அரசு சர்வதேச அரங்கில் இலங்கை அரசின் அராஜகங்களை எதிர்த்து  குரல் எழுப்பக் கூடாது என்பதற்காகவே மீனவர்களை கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் நிகழ்த்தப்படுகிறது என்று தெரிகிறது. இது முற்றிலும் ஏற்புடையது அல்ல. 

இந்திய அரசு அமைதியான பார்வையாளராக இருக்கக் கூடாது. பல நூற்றாண்டு காலமாக மரபு வழியாக மீன் பிடிக்கும் பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை இலங்கை அரசு தடுக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். 

இந்த நிகழ்வுகளை பொறுத்த வரையில் அவசர உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago