முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: சேவாக் அதிரடி நீக்கம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மார்ச். 8 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடை சி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் துவக்க வீரர் சே வாக் நீக்கப்பட்டார். முதல் 2 டெஸ்டுக்கான அணி அறிவிக்க ப்பட்ட போது அதில் 15 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். தற்போது 1 வீரர் குறைக்கப்பட்டு 14 வீரர்கள் இடம் பெ ற்று உள்ளனர். 

டெல்லி வீரரான சேவாக் சமீப காலத் தில் மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தேர்வுக் குழுவினர் அவரை அதிரடியாக நீக்கி உள்ளனர். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் ஆடிய சேவாக் மொத்தம் 3 இன்னிங்சில் ஆடி 27 ரன் மட்டுமே எடு த்து இருக்கிறார். 

இந்திய அணியின் மூத்த சுழற் பந்து வீச் சாளரான ஹர்பஜன் சிங் சிறப்பாக பந் து வீசி அதிக விக்கெட் எடுக்காத போ திலும், நீக்கத்தில் இருந்து தப்பி இருக்கிறார். 

பி.சி.சி.ஐ. செயலாளரான சஞ்சய் ஜெ க்டேல் நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி 2 டெஸ்டுக்கான இந்தி ய அணி வீரர்கள் பட்டியலை வெளியி ட்டார்.

34 வயதான சேவாக் நீக்கம் தவிர இந்தி ய அணியில் வேறு மாற்றம் எதுவும் கிடையாது. 3 - வது டெஸ்ட் மொகா லியில் 14 -ம் தேதி துவங்குகிறது. 4 - வ து டெஸ்ட் டெல்லியில் 22 -ம் தேதி துவங்குகிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னை மற்றும் ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற் று உள்ளது. 

முன்னதாக மற்றொரு துவக்க வீரரான காம்பீர் மோசமாக ஆடியதால் நீக்கப் பட்டார். தற்போது சேவாக்கும் நீக்கப் பட்டு இருக்கிறார். 

எனவே முரளி விஜயுடன், ஷிகார் தவான் அல்லது ரகானே இருவரில் ஒரு வர் ஆட்டத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி : - 

தோனி (கேப்டன்), டெண்டுல்கர், முர ளி விஜய், சேத்தேஸ்வர் புஜாரா, ரகா னே, விராட் கோக்லி, ரவீந்திர ஜடே ஜா, ஷிகார் தவான், அஸ்வின், அசோ க் திண்டா, ஹர்பஜன் சிங், புவனேஷ் வர் குமார், இஷாந்த் சர்மா மற்றும் ஓஜா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago