நவீன வகுப்பறைகள்: அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்தார்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரூ.46.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன வகுப்பறைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறையில் புதியதாக தேர்ந்து எடுக்கப்படும் துணைப் பதிவாளர்களுக்கும், முதுநிலை ஆய்வாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் நிதி உதவியுடன் 1979-ம் வருடம் சென்னை அண்ணா நகரில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் தொடங்கப்பட்டது. 

இந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அனைத்து வகுப்பறை வசதிகள், தங்கும் வசதி, உணவக வசதி, நூலகம், கணிப்பொறி மையம், கூட்டுறவு அங்காடி, விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு வசதிகள் இருந்தாலும் புதிதாக இரண்டு நவீன வகுப்பறைகள் ரூ.46.35 லட்சம் செலவில் கட்டப்பட்டது. புதிய வகுப்பறைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் சந்திர பால்சிங் யாதவ், உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சீத்தாராமன், மேலாண்மை நிலைய முதல்வர் டாக்டர் ஜெகன்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: