ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் நடந்த விபத்தில் 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Leve-Cross 0

 

கபூர்தலா, ஏப்.24 - பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒன்றில் சென்ற ஒரு ஜீப் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் பஜ்ஜியான் என்ற இடத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு ஜீப் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ரயில் அந்த ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பலியான அனைவரும் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பனோலங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: