வெனிசுலாவின் அடுத்த அதிபர் நிக்கோலஸ் சாய்பாபா பக்தர்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

காரகாஸ்: வெனிசுலா துணை அதிபரும், ஹ்யூகோ சவேஸுக்கு அடுத்தபடியாக அதிபராகவிருப்பவருமான நிக்கோலஸ் மதுரோ ஒரு காலத்தில் பஸ் டிரைவராக இருந்துள்ளார். அவர் ஒரு சாய்பாபா பக்தர் ஆவார்.

வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சவேஸ் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதையடுத்து துணை அதிபரான நிக்கோலஸ் மதுரோ அடுத்த அதிபராக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரோ ஒரு காலத்தில் பஸ் டிரைவராக இருந்தவர். அவர் புட்டப்பர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 2005ம் ஆண்டு மதுரோ தனது மனைவி சீலியா ப்ளோரஸுடன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு வந்துள்ளார்.


அவர் சத்ய சாய்பாபாவை சந்தித்தும் பேசியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி சாய்பாபா இறந்தபோது மதுரோ கோரிக்கையின்படி வெனிசுலா நாடாளுமன்றத்தில் சாய்பாபாவின் மரணம் குறித்து பேசப்பட்டுள்ளது.

மதுரோ இந்தியா வந்தபோது அவருக்கு சாய்பாபா தன்னுடைய பெரிய போட்டோ ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த போட்டோ மதுரோவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரோ வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு வந்ததாக சத்ய சாய் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: