முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச மகளிர் தினம்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தோல்விகளை வெற்றி படிகளாக்கி புதிய சரித்திரம் படைத்திட, வீறுநடை போட உறுதி ஏற்போம் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். 

இது தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்  செய்திட வேண்டுமம்மா ​​

என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பெண்ணின் சிறப்பை பெருமையாக எடுத்துரைக்கிறார். பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8​ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக  கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிர்க்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை  உரித்தாக்கிக் கொள்கிறேன்.        

உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, மகளிர் வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம்; இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம்; மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம்; அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு; இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்; இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்ச திட்டம்; சிறந்த பெண்மணிக்கு அவ்வையார் விருது  போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாடிய மகாகவி பாரதியார் பிறந்த இந்த இந்திய திருநாட்டில், பெண்கள் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தோல்விகளை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட எழுச்சியுடன் வீறுநடை போட இந்த இனிய நாளில் உறுதியேற்போம். அறிவுக் கண் திறந்து, ஆக்கnullர்வமாய் பணியாற்றி, உலகை வாழவைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்து, எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago