முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இங்கி., முதல் இன்னிங்சில் 167 ரன்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

டுனேடின், மார்ச். 8 - நியூசிலாந்து அணிக்கு எதிராக டுனேடி ன் நகரில் நடந்து வரும் முதலாவது கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கி லாந்து அணி முதல் இன்னிங்சில் 167 ரன்னில் சுருண்டது. 

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங் சில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிராட் ஒருவர் மட்டுமே தாக்குப் பிடித் து ஆடினார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், மார்டின் மற்றும் வாக்னர் இருவரும் சிறப்பாக பந்து வீசி 8 முக்கிய விக்கெட்டைக் கை ப்பற்றி இங்கி. அணியின் ரன் குவிப்பை க் கட்டுப் படுத்தினர். அவர்களுக்கு ஆத ரவாக செளதீ மற்றும் போல்ட் ஆகி         யோர் பந்து வீசினர். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவ து டெஸ்ட் போட்டி டுனேடின் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத் தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இங்கி. அணி சார்பில், கேப்டன் குக் மற்றும் காம்ப்டன் இருவ ரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய இங் கிலாந்து அணி நியூசி.யின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய து. இறுதியில் அந்த அணி 55 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்னில் சுருண்டது. 

இங்கிலாந்து அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராட் அதிகபட்சமாக, 121 பந்தில் 45 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் மார்டின் வீசிய பந்தி ல் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, இயான் பெல் 41 பந்தி ல் 24 ரன் எடுத்தார். தவிர, கீப்பர் பிரை யர் மற்றும் ஆண்டர்சன் இருவரும் தலா 23 ரன்னையும், பின் 20 ரன்னையு ம் எடுத்தனர். கேப்டன் குக் 10 ரன்னிலு ம், காம்ப்டன் மற்றும் பீட்டர்சன் பூஜ்ய த்திலும் ஆட்டம் இழந்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், மார்டின் 43 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடு த்தார். வாக்னர் 42 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர,செளதீ மற் றும் போல்ட் இருவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்பு முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 2 -வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 42 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன் னை எடுத்து இருந்தது. 

அந்த அணி தரப்பில், ரூதர்போர்டு 112 பந்தில் 77 ரன்னை எடுத்து ஆட்டம் இழ க்காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

மற்றொரு துவக்க வீரரான புல்டான் 140 பந்தில் 46 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 7 பவு ண்டரி அடக்கம். 

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்க ளாக இறங்கிய ரூதர்போர்டு மற்றும் புல்டான் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து நல்ல அடித்தளத்தை அமை த்துக் கொடுத்துள்ளனர். 

முன்னதாக முதல் நாள் ஆட்டம் மழை யால் கைவிடப்பட்டது. 2 -வது நாள் மட்டும் முழு நேர ஆட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago