காரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கும்பல்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

கர்கான், மார்ச்.8 -- கர்கானில் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணை, காரில் செல்லும்போது 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். டிரைவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம் ஆகும். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

புதுடெல்லியிலுள்ள மதன்புரியைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.  பணிமுடிந்ததும் இவர் வீட்டுக்குசெல்ல முயன்றார். அப்போது அவருடன் பணியாற்றிய ஒருவர் காரில் ஏறும்படி கூறியுள்ளார். அப்போது காரில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்துள்ளனர். இதை நம்பிய அந்த பெண் காரில் ஏறி அவர்களுடன் சென்றுள்ளார்.  


டிரைவர் காரை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார். 

 திடீரென காரில் இருந்த ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து மற்றவரும், டிரைவரும் அந்த பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த பெண் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவர் மதன்புரியில் வசித்து வந்தார். இவர் ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு டிரைவர் பரிச்சயமானவர் என்பதால் காரில் ஏறிச்சசென்ற இவரை அவர்கள் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களை நம்பி காரில் ஏறிய அவருக்கு அவர்கள் மூவரும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பின்னர் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், மருத்துவசோதனையிலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: