முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 8 - வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக் காக 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. முஸ்பிகர் ரகீம் தலைமையிலான வங்க தேச அணி இலங்கையில் சுற்றுப் பய ணம் செய்து கேப்டன் ஆஞ்சலோ மேத் யூஸ் தலைமையிலான அணிக்கு எதி ராக விளையாட இருக்கிறது. 

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளு க்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. 

இதன் முதல் போட்டி காலே நகரில் துவங்க இருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியைப் பொ றுத்தவரை இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

காலே சர்வதேச மைதானம் இலங்கை அணிக்கு சாதகமான மைதானமாகும். எனவே இங்கு வெற்றிக் கணகக்குடன் தொடரை துவக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. 

மேத்யூஸ் மற்றும் ரகீம் இருவருக்கும் இந்தத் தொடர் முதலாவது டெஸ்ட் தொடராகும். எனவே அவர்கள் இதில் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளு க்கு இடையே இதுவரை 12 டெஸ்டுகள் நடந்துள்ளன. இதில் இலங்கை 12 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை அணி இந்தத் தொடரில் வெ ற்றிக்காக பெரும்பாலும் சுழற் பந்து வீச்சையே நம்பி உள்ளது. ரங்நாத ஹெராத்தும், அஜந்தா மென்டிசும் தயா ராக உள்ளனர். 

இலங்கை அணியில் காயம் அடைந்து ள்ள ஜெயவர்த்தனே, சங்கக்கரா மற்று ம் மென்டிஸ் ஆகியோர் இந்தத் தொட ருக்கு திரும்பியுள்ளனர். 

இலங்கை அணியின் பேட்டிங்கில் ஜெ யவர்த்தனே, சங்கக்கரா, தில்ஷான் சண்டிமால், திரிமன்னே ஆகியோர் வலு சேர்க்கின்றனர். 

கடந்த 2000 -ம் ஆண்டில் டெஸ்ட் போ   ட்டியில் அறிமுகமான வங்கதேச அணி இதுவரை 75 டெஸ்டில் விளையாடி 65 ல் தோல்வி அடைந்துள்ளது. 3 டெஸ்டி ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. கெண்டைக்கால் காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். 

இலங்கை அணிக்கு எதிரான இந்தத் தொடரில் வங்கதேச அணி சிறப்பாக ஆடும் என்று முன்னாள் கேப்டனான மொகமது அஸ்ரப்புல் நம்பிக்கை தெரி வித்தார். 

இலங்கை அணி : - 

ஆஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்),ஜெய வர்த்தனே, குமார் சங்கக்கரா, தில்ஷா ன், சண்டிமால், கருணாரத்னே, திரிம ன்னே, எரங்கா, குஷால் பெரீரா, குல சேகரா, அஜந்தா மென்டிஸ், ஜீவன் மென்டிஸ், வெலிகேடரா, சுரங்கா லக் மால், ஹெராத், மற்றும் தரிண்டுகெள ஷல் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்