முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சையில் முதல்வருக்கு நாளை பாராட்டு விழா

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

தஞ்சை. மார்ச்.8 - காவிரி பிரச்சனை தமிழக விவசாயிகளுக்கு  இலங்கை தமிழர் பிரச்சனையாகவே இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் பொன்னிநதி தீரத்து புறப்பாடு என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணாநிதி போல் அல்லாமல், காவிரி ர் பிரச்சனைக்காக என்னென்ன போர்க்கால நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கைகளையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா எடுத்து வந்தார்.

அந்த முயற்சிகளின் பலனாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய அரசு பணிந்து அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. வரலாறு காணாத இந்த தீர்ப்பால் வாடிய பயிரைக்கண்டு வாடி நின்ற விவசாயிகளின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழர்களுக்கே உரிய பாங்கான நன்றி பாராட்டும் விதமாக விவசாயிகள் தங்கள் வயிற்றில் பால் வார்த்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக நன்றி பாராட்டு விழா நடத்த முடிவு எடுத்தனர்.

கடமையை தனது உடமையாக நினைக்கும் முதல்வர் ஜெயலலிதாவும், விவசாயிகளின் அன்பான நன்றியை ஏற்றுக்கொண்டு பாராட்டு விழாவுக்கு வருவதாக உளர்வமான சம்மதித்தார். இதனை விவசாயிகள் தங்களது வாழ்க்கையில் தனது தாய்க்கு செய்யும் கடமையாக நினைத்து முழு வீச்சில் பாராட்டு பணிகளை துவங்கினர். மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மக்களாட்சி தத்துவத்திற்கு உதாரணமாக திகழும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நாளை மாலை 4 மணிக்கு (9.3.2013) நடக்கிறது. 

நன்றி பாராட்டு விழா ஏற்பாடுகளை காவிரிநீர் உரிமை மீட்பு பாதுகாப்பு கட்டமைப்பினுடைய செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் தலைமையில் விவசாயிகள் உணர்வுப்ர்வமாக உணர்ச்சிப்ர்வமாக செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தஞ்சை நகரம் விழாக்கோலம் ண்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாய குடும்பத்தினரும் தங்கள் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி பாராட்டு இன்றே தயாராகி வருகின்றனர்.

மேலும் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் விவசாயிகளுக்காக அவர்களின் உணர்வுப்ர்வமான விழாவிற்காக தங்களையும் இணைத்து கொண்டு அதிமுக வினர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க தயாராகி வருகிறார்கள்.

விவசாயிகள் அமைப்பின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கிட பொன்னியின் செல்வி ஐம்பொன்னாலான சிலை தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து வரும் விவசாயிகளுக்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒத்துழைப்பாக அவர்கள் நடத்தும் நன்றி பாராட்டு விழா உலகம் பாராட்டும் வகையில் அமைந்திட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகளும் தங்களது குடும்ப விழாவாக இவ்விழாவினை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்