2013-2014 பட்ஜெட்: நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்

March 7, 2013 அரசியல்

 

சென்னை, மார்ச்.8 - 2013-14 -ம் ஆண்டுக்கான  தமிழக பட்ஜெட் வரும் 21-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் ரோசய்யா உரையுடன் பிப்.1ம் தேதி தொடங்கியது. 8-ம் தேதிவரை நடந்த இக்கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 21-ம் தேதி தொடங்குகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிவிப்பில் 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு தமிழக சட்டமன்றப் பேரவைக் கூடும் என்றும், அன்று காலை 2013-2014-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவையில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

21-ந்தேதி  காலை 10.30 மணிக்கு  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2013-14-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அன்றைய தினம் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அதன்பிறகு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். புதிய சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வாரம்

முல்லை நீர்மட்ட விவகாரம்: கேரள முதல்வருக்கு கடிதம்

சென்னை,நவ 17 - முல்லை பெரியாறு நீர் திறக்கப்படுவதை முறைப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது ...

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

  சென்னை, நவ 17 - தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில், பிங்க்ளே விஜய் மாருதி - தொழில்துறை இணை செயலாளர்(சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் - ப ணிகள்), சுபோத் குமார் - பள்ளிக் கல்வி துறை ...

அமெரிக்காவில் 3 மாணவரை கொன்ற கைதி தப்பியோட்டம்

  நியூயார்க், நவ 17 - அமெரிக்க பள்ளியில் 3 மாணவரை சுட்டு கொன்ற கைதி தப்பினான். அமெரிக்காவில் ஓகியோ ...

லிங்கா ஆடியோ வெளியீட்டில் ரசிகர்கள் ரகளையால் பரபரப்பு

  சென்னை, நவ 17 - ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னை சத்யம் ...

சீன ஓபன் சூப்பர் சீரிஸ்: சாய்னா நெவால் சாம்பியன்

  புஸாவ், நவ.17 - சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் ...

பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா பயிற்சி

  புது டெல்லி, நவ 1 6 - இந்திய, பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சீன படைகள் பயிற்சி ...

கிறிஸ்துமஸ் - புத்தாண்டு - பொங்கலுக்கு சிறப்பு ரெயில்கள்

  சென்னை, நவ.16 - மேல்மருவத்தூர் கோவில் திருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு திருவிழா, தைப்பூசம் மற்றும் ...

2016-க்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு

  சென்னை, நவ.15 - 2016 மார்ச் மாதத்திற்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடைதிறப்பு

  சபரிமலை, நவ 14 - மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கோயில் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழகம்,புதுவை,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு ...

இம்ரான்கானை கைது செய்ய பாக். நீதிமன்றம் பிடிவாரண்ட்

  இஸ்லாமாபாத், நவ 14 - பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் முன் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தெஹ்ரிக் இ இன்சாப் ...