முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சங்க பாராட்டுவிழா தஞ்சையில் இன்றுநடக்கிறது

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 9 - காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சையில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது. அந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ``பொன்னியின் செல்வி'' சிலை நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது. மத்திய அரசிதழில் காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடச் செய்து, தமிழகத்துக்கான காவேரி நீnullரை உச்சநீnullதிமன்றம் மூலம் பெற்று தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 27.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவேரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் .எஸ். ரெங்கநாதன் தலைமையில் காவேரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இதற்கான விழாவை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 7-ந் தேதி தஞ்சையில் இந்த விழாவை நடத்த அனுமதி அளித்தார். இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற 7-ந் தேதி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சைக்கு வருவதாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தஞ்சை வருகை 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. ``விழா ஏற்பாடுகளை கவனிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் 2 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அதை அவர் பெரும் மனத்துடன் ஒப்புக் கொண்டு வருகிற 9-ந் தேதி சனிக்கிழமை தஞ்சையில் பாராட்டு விழா நடத்த அனுமதி அளித்துள்ளார். இந்தப் பாராட்டு விழா வருகிற 9-ந் தேதி மதியம் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது'' என்று தமிழ்நாடு காவேரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரெங்கநாதன் கூறியிருந்தார்.
அதன்படி இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று தஞ்சை வருகிறார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு காவிரி nullநீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேல், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் சத்தியநாராயணன், தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் பாண்டுரங்கன், தமிழ்நாடு காவிரி நீnullர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாராம், திருவையாறு நவ்ரோஜித் சோழகர், அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், செயலாளர் கு.தங்கமுத்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். முடிவில் தமிழ்நாடு காவிரி nullநீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் இணை செயலாளர் காந்திபித்தன் நன்றி கூறுகிறார்.
விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி வெண்கல சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. தஞ்சையில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே முதல்அமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார். இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து ஆய்வு செய்தனர்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் பந்தல் அமைக்கும்பணிகளையும், வரவேற்பு ஏற்பாடுகளையும் அங்கே இருந்து பார்வையிட்டு வருகிறார்கள். அவர்களுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், ரெங்கசாமி எம்.எல்.ஏ., நகரசபை தலைவி சாவித்திரிகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்து ஆய்வு செய்தனர். முதல்அமைச்சர் தஞ்சை வருகையையொட்டி தஞ்சை நகரமே விழாக்கோலம் nullண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகளாகவே காணப்படுகின்றன. மேலும் முதல்அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளிலும், வல்லம் சாலையிலும், புதிய பஸ் நிலையம் பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்