முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களுக்கு 10 ஆயிரம் சைக்கிள்கள் இந்தியா வழங்கியது

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். - 9 - இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் போது இடம்பெயர்ந்த வடக்கு பகுதியை சேர்ந்த தமிழர்களுக்கு 10 ஆயிரம் சைக்கிள்களை இந்திய அரசு நன்கொடையாக வழங்கியது. தமிழர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும் வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் சைக்கிள்கள் 5 மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அதில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தலா 2,500 சைக்கிள்களும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு தலா 1,750 சைக்கிள்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 1,500 சைக்கிள்களும் வழங்கப்பட்டன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் 2 வது வீட்டு வசதி திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் இந்தியா அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago