முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 9 - அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மறைவுக்கு பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்கு குழ 6-வது வார்டு உறுப்பினரும், செல்லம்பாளையம் ஊராட்சிக்கழக செயலாளருமான எஸ்.என்.ரத்தினசாமி சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், கோவை மாநகர் மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிச்செயலாளர் என்.கிருஷ்ணன், வடசென்னை தெற்கு மாவட்டம் எழும்பூர் பகுதி மாவட்ட பிரதிநிதி மீன்சேகர், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் சேகல் ஊராட்சிமன்றத்தலைவர் அ.செல்வராணி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன். ரத்தினசாமி, கிருஷ்ணன், மீன்சேகர் மற்றும் செல்வராணி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த இரங்கலில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago