முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா மீதுஅணு ஆயுததாக்குதல் நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

சியோல், மார்ச். - 9 - தங்களது நாட்டை பாதுகாக்க அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வட கொரியா அண்மையில் அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் அந்நாட்டின் மீது தடைகள் விதிக்க ஐ.நா. மும்முரம் காட்டி வருகிறது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா இதற்கான தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டின் பகைவர்களின் தலைமையகம் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், வட கொரியா மீது தடைகள் விதிக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா தலைமை ஏற்றுள்ளது. வட கொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் முயற்சிக்குப் பின்னால் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. எங்களைத் தற்காத்துக் கொள்ள பகைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமையை நாங்கள் செயல்படுத்துவோம்.
1950-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மீது கொரிய மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் அதே குற்றத்தைச் செய்யக் கூடாது. தென் கொரிய தலைநகர் சியோலில் அமெரிக்காவின் தலைமையில் நிறுத்தியுள்ள ஐ.நா. படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்