முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர்தினத்தை முன்னிட்டு பெண்களுக் குதாலிக்குதங்கம் மாவட்டஆட்சியர் வழங்கினார்

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை மார்.- 9 - மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு திருமணநிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார். சிவகங்கை மாவட்டம், சமூகநலத்துறையின் மூலம் பல்வே நலத்திட்ட உதவிகள் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அவர்களின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17.5.11 முதல் பத்தாம் பகுப்பு வரை படித்த பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் திருமண நிதி உதவித் தொகையும் பட்டம் மற்றும் பட்டயம் கல்வித் தகுதி பெற்றவர்ரகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் திருமண நிதி உதவியும் வழங்குவதோடு தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் (2012-2013)ல் 2300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 1563 நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 737 நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் ஆகமொத்தம் 759.25 லட்சங்கள் நிதி உதவியாகவும் 4 கிராம் தங்கம் தாலிக்கும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக 1000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 712 ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதமும் 288 ஏழைப் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆகமொத்தம் 322 இலட்சம் மதிப்புள்ள திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் வீதம் தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது. 8.3.2013ந் தேதியில் நடைபெற்ற விழாவில் முறையே திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 262 பயனாளிகளுக்கு ரூ.83.25 இலட்சங்கள் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் 71 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.35.50 இலட்சங்கள் மற்றும் 191 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.47.75 லட்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கம்புணரி சேர்மன் வாசு, துணைச்சேர்மன் காந்திமதி தமிழரசு, எஸ்.புதூர் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஓட்டுனர்கள் சங்க துணைத்தலைவர் அய்யாக்காளை, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிசாமி, அழகு, லதாதேவேந்திரன், ரேனுகாதேவி கண்ணதாசன், தேன்மொழி ராஜா, ரெங்கராஜன், நல்லையா மற்றும் சமூகநலத்துறை ராஜராஜேஸ்வரி, டிஆர்ஓ தனபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்