முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 10 - காவிரி மேலாண்மை வாரியத்தை காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிகைகளை எடுக்காவிட்டால் அவற்றை அடைவதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன் என்றும், காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தினர். லட்சக்கணக்கான மகக்ள் பங்கேற்ற பிரம்மாண்டமான பாராட்டுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:- என்னைப் பொறுத்த வரையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்; காவேரி nullரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற மனம் என்னிடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று.  இதனால் தான், சுயநலமின்றி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நான் செயல்பட்டேன். அதில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.  நாம் எவ்வளவு மன்றாடிக் கேட்டும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை.   எனவே இதனை வெளியிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு எதிராக உச்ச nullநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்ய நான் உத்தரவிட்டேன்.  இவ்வாறு பல விஷயங்களில், கர்நாடகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். நமது உரிமைகளை, நீnullதிமன்றங்கள் மூலம் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம்.  இந்த நிலைமை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும்.  நமக்கு உரிய நீnullரை நாம் பெற்றிருக்க முடியும்.  நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெறும் நிலை இருந்த போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை இது குறித்து சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது வெளியிட வேண்டாம் என்று சொன்னார்களா? என்பது தெரியவில்லை.  ஆனால், எழுத்துப் nullர்வமாக எதையும் அளிக்கவில்லை. இந்தச் சந்திப்பின் மர்மம் என்ன என்பதை கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இவர்கள் சந்தித்ததாலோ என்னவோ, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர், மீண்டும் உச்ச nullநீதிமன்றத்தின் தலையீட்டால் தான், மத்திய அரசு வேறு வழியில்லாமல் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, உச்ச நீnullதிமன்றமே, தானே முன் வந்து பிறப்பித்த உத்தரவுக்காக ஜெயலலிதாவுக்கு பாராட்டு என்கிறார்கள்..., என்று தனக்குள் இருக்கும் பொறாமை உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். 

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீnullதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரத்தை இந்தத் தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காவேரியில் போதிய அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததன் காரணமாகவும்; பருவமழை பொய்த்ததன் காரணமாகவும் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கி இருக்கிறோம். 50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 3,06,794 விவசாயிகளுக்கு, 524 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, 15,000 ரூபாய் இன்றைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், இதில் தமிழக அரசு வழங்கியது எவ்வளவு? பேரிடர் நிவாரணத் தொகை எவ்வளவு? காப்பீட்டு நிறுவனம் வழங்கியது எவ்வளவு? என்றெல்லாம் கருணாநிதி வினா எழுப்பியுள்ளார். 

நிவாரண உதவிகளை நான் 8.2.2013 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த போதே, இது பற்றி தெளிவாகக் கூறியுள்ளேன். இருப்பினும், அதனை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 50 விழுக்காடு பயிர் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் 4,346 ரூபாய் மட்டுமே அளிக்கும். இந்தத் தொகையும் பயிர் அறுவடை சோதனைகள் முடிந்த பின்னரே கிடைக்கும். காப்பீட்டிற்கான முழுத் தொகையையும் விவசாயிகள் சார்பாக தமிழக அரசே செலுத்தியுள்ளது. அரசு காப்பீட்டுத் தொகையை செலுத்தியதால் தான், காப்பீட்டு நிறுவனங்கள் நிவாரணம் அளிக்க உள்ளன. 

மேலும், வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு நிவாரணம், வசூலிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைவிட கூடுதலாக வழங்க நேரிட்டால், காப்பீட்டு நிறுவனம், செலுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையில், நிர்வாக செலவு nullநீங்கலாக உள்ள வசூலிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை மட்டுமே இழப்பீடாக வழங்கும். 

மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையில், 50 விழுக்காட்டு தொகையினை மத்திய அரசும்; 50 விழுக்காட்டு தொகையினை மாநில அரசும் வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரணத் தொகை, ஐந்து ஆண்டு திட்டக் காலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தொகைக்கு அதிகமான செலவினத்தை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். எனவே, 50 விழுக்காட்டிற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, வழங்கப்படும் முழு நிவாரணத் தொகையான 15,000 ரூபாயையும் மாநில அரசே தற்போது வழங்குகிறது. 51 விழுக்காடு இழப்பிற்கு, ஏக்கர் ஒன்றுக்கு, மத்திய அரசிடமிருந்தும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் பெறக்கூடிய தொகை 2,304 ரூபாய். இதிலிருந்து, மாநில அரசு செலுத்தியுள்ள காப்பீட்டுத் தொகையை கழித்துவிட்டால், அரசு பெறக்கூடிய தொகை 2,130 ரூபாய் தான். இந்தக் கணக்கின்படி பார்த்தால், 50 விழுக்காட்டிற்கு மேல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டிற்கு தக்கவாறு ஏக்கருக்கு 11,000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாய் வரையிலான இழப்பீட்டை தமிழக அரசு வழங்குகிறது.  

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ஏக்கருக்கு 15,000 ரூபாயினை விவசாயிகளுக்கு அளித்து இருக்கிறோம். பயிர்க் காப்பீட்டுத் தொகைக் கட்டணத்தையும் விவசாயிகள் சார்பில் எனது தலைமையிலான தமிழக அரசே செலுத்தி இருக்கிறது. நான் இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்த போது, இதனை எதிர்கட்சிகள், குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் மனதாரப் பாராட்டினர்.  வறட்சி காலங்களில் இது போன்ற நிவாரணம் கொடுப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, வெளியில் இருந்து கொண்டு பொறாமையால், அறியாமையால், குழப்பத்தால் ஏதேதோ கூறிக் கொண்டிருக்கிறார். நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத்  தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி nullநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று உச்ச nullநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. எனவே, சட்டப்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், உங்களின் ஆதரவுடன் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீnullர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன்.

காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி, தமிழகத்திற்குரிய பங்கினை பெற்றுத் தருவேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்த நன்றி தெரிவிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த விவசாய சங்கங்கள் அனைத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் பொது வாழ்விற்கு வந்து 31 ஆண்டுகள் ஆகின்றன.  இந்த 31 ஆண்டுகளில் உண்மையான மன நிறைவை அளிக்கும் விழா இன்று நடைபெற்ற கொண்டு இருக்கும் இந்த விழா என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்த அளவுக்கு எனக்கு பாராட்டு தெரிவித்த என்னை வாழ்த்திப் பேசிய பெரியவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

குறிப்பாக அன்புச் சகோதரர் தா. பாண்டியன் பேசியதையும், பெரியவர் ரங்கநாதன்  பேசியதையும், எம். ராஜேந்திரன் பேசியதையும், சத்யநாராயணன் பேசியதையும், பயரி கிருஷ்ணமணி பேசியதையும், உழவர் பாண்டுரங்கன், ராஜாராம், திருவையாறு நவரோஜி சோழகர் ஆகியோர் பேசிய வார்த்தைககளையும் என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

எத்தனையோ பேர் பாராட்டு தெரிவிப்பார்கள். அவையெல்லாம் உதட்டளவிலான பாராட்டுக்கள். இன்று என்னை வாழ்த்தியவர்களின் வார்த்தைகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தது என்பதை என்னால் உணவ முடிந்தது என்பதை தெரிவித்துக்கொண்டு, தமிழக மக்கள், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் நடந்து கொள்வேன் என்ற உத்தரவாதத்தினை அளித்து அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்