முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் பிரதமர் உரை: குஜராத் முதல்வர் மோடிகிண்டல்

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

தொராஜி, மார்ச். - 10 - பிரதமர் மன்மோகன்சிங் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஆற்றிய உரைகளை கவனிக்கும் போது காலி குடம் அதிக சப்தம் போடும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்திருக்கிறார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை நைட் வாட்ச்மேன்ா என்று கிண்டலடித்திருந்தார் மோடி. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துப்பாக்கி புகழ் பிரமுகரான வித்தல் ராடாடியாவும் அவரது ஆதரவாளர்களும் நேற்று பா.ஜ.க. வில் இணையும் கூட்டத்திலும் மன்மோகன்சிங்கை கிண்டலடித்திருக்கிறார் மோடி. இக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், பிரதமர் மன்மோகன்சிங் பேசியதை கவனித்தேன். அப்போது எனக்கு காலி குடம்தான் அதிக சத்தம் போடும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோல்வியை மறைக்கவே அவர் சத்தம் போடுகிறார். இதற்காகவே கவிதைகளை எல்லாம் அவர் பயன்படுத்துகிறார். அவர் கூறும் கருத்துக்களால் நாடு ஒன்றும் வளர்ந்து விடப் போவதில்லை. மன்மோகன்சிங் ஆவேசம் அடைவதை விட்டு, விட்டு இந்த நாட்டை முன்னேற்றும் வகையில் அர்த்தமுள்ள பேச்சை பேச வேண்டும். மன்மோகன்சிங் எங்களுக்கு கொடுக்கும் பதில்கள் 24 மணி நேரத்தில் செத்து விடுகின்றன. ஆனால் அவருக்கு சுஷ்மா சுவராஜ் கொடுக்கும் பதிலடிகள்தான் பிரமாதம் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்