முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 தேர்தலிலும் ஐ.மு. கூட்டணியே வெல்லும் பிரதமர் நம்பிக்கை

சனிக்கிழமை, 9 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 10 - 2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பேசுகையில், 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரதி ஜனதா கட்சி இரும்பு மனிதர் என்ற ஒருவரை களமிறக்கினர். மன்மோகன்சிங் ஒரு பலவீனமான பிரதமர் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் என்ன நடந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும். பா.ஜ.க. வின் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அதுதான் அடுத்த தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது 6 சதவீதத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சி 3.5 சதவீதமாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2.9 சதவீதம்தான் இருந்தது. தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 2 சதவீதம் குறைந்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 0.8 சதவீதம்தான் குறைந்திருந்தது. நாடு இப்பொழுது பொருளாதார சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த காலங்களிலும் இதே போன்ற நிலைமையை இந்தியா சந்தித்திருக்கிறது. இதனால் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றார் அவர். அப்போது எழுந்து பேசிய பா.ஜ.க. வின் தலைவரும் எம்.பியுமான ராஜ்நாத் சிங், பிரதமர் இதுபோல் ஆத்திரமடைந்து பேசியதில்லை. உங்கள் முகத்தில் தெரியும் சுடரானது அது மரித்துப் போவதற்கு முன்பு எப்படி பிரகாசிக்குமோ அது போல் இருக்கிறது என்று பதில் கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்