முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மொரீஷியஸ் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 11 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக இன்று மொரீஷியஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடக்கும் மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.  இந்த பயணத்தின் போது இந்தியா, மொரீஷியஸ் நாடுகள் இடையே பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட சமூக நலத்துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியாவும், மொரீஷியசும் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய உறவு முறைகளை கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றன. மொரீஷியசுடனான உறவுக்கு இந்தியா அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. காரணம் இங்கு வசிக்கும் 70 சதவீத மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.  தன்னுடைய பயணத்தின் போது பிரணாப் முகர்ஜி மொரீஷியஸ் நாட்டு அதிபர் ராஜ்கேஸ்வுர், பிரதமர் நவீன் ரங்கோலான் மற்றும் அந்நாட்டு சபாநாயகர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து பேசுவார். ஜனாதிபதியின் வருகையை மொரீஷியஸ் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்வது இது 2 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அவர் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்தார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்த நிலையிலும் அவர் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஜனாதிபதியை வங்கதேசத்தின் மருமகனே வருக என்று அந்நாட்டு மக்கள் அழைத்து அன்புடன் வரவேற்பு கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago