முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை பிரதமராக விடவே விடமாட்டேன்: லாலுபிரசாத் சபதம்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

பாட்னா, மார்ச் - 11 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதை எப்பாடுபட்டாவது தடுப்பேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் லாலு பிரசாத் யாதவ், நாட்டின் பிரதமர் பதவியில் மோடி உட்காருவதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவேன். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பேன். குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு இரு இனங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி பல நூறு பேரை படுகொலைக்குக் காரணமான இருக்கும் ஒரு நபர் இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டின் பிரதமராக முடியும்? நாட்டின் பிரதமராகிவிடுவோம் என்ற நரேந்திர மோடியின் கனவு ஒருநாளும் பலிக்காது. அவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு எதுவும் இல்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago