முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.-ல் இருந்துநாடு திரும்பினார் யாசின்மாலிக்! சிவசேனா போராட்டம்!

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

டெல்லி, மார்ச் - 11 - பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக சொல்லப்படுகிற ஹபீஸ் சித்தை சந்தித்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் நேற்று டெல்லி திரும்பினார். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற சிவசேனா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சென்றிருந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சித் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யாசின் மாலிக்கை கைது செய்ய வேண்டும், அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் யாசின் மாலிக் நாடு திரும்புவாரா? என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் நேற்று அவர் இஸ்லமாபாத்திலிருந்து டெல்லி வந்து சேர்ந்தார். அப்போது சிவசேனா கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யாசின் மாலிக்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினேன். நான் சித்தை அழைக்கவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு கூட நான் சித்தை சந்தித்து பேசினேன். அப்போது என்னை யாரும் குறிவைக்கவில்லை. இப்பொழுது ஏன் என்னை குறிவைத்து பேசுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் என்னை சிறையிலடைத்தாலும் கவலையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்