முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் லிட்டில் பிளவர்பள்ளி ஆண்டு\விழா மழலையர்களின் கலைநிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி பிப் - 11 - ஆண்டிபட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியின் 8-வது ஆண்டு விழா மழலையர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் மேக்கிழார்பட்டி ரோட்டில் உள்ள லிட்டில் பிளவர் நர்சரி பிரைமரி பள்ளியின் 8-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் வீரலட்சுமி ராஜவேல் வரவேற்றார். பள்ளி நிர்வாகத்தலைவர் ஹென்றிஅருளானந்தம் முன்னிலை வகித்தார். சவுத் இண்டியா சார்ச் ஆண்டிபட்டி டேனியல் துரைபாண்டியன், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்வியியல் கல்லுாரி முதல்வர் வேர்ஜின் விமலா, ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லுாரி முதல்வர் செல்லமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பள்ளி மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக மழலைக்குழந்தைகளின் நடனம் காண்போர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பாரிய நடனங்களும், காவிய நாடகமும், கரத்தே, யோக உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, குழந்தைகள் தினவிழா போட்டி, சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி போட்டி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்-ஆசிரியைகளும், ஊழியர்களும் செய்திருந்தனர். பள்ளி ஆசிரியை அம்சவள்ளி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்