முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.எஸ்.பி. கொலை வழக்கு: சாட்சி சொல்ல மக்கள் மறுப்பு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.12 - உத்தர பிரதேசத்தில் டி.எஸ்.பி. உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜபையாவுக்கு பயந்து கிராமமக்கள் யாரும் சாட்சி சொல்ல முன் வரவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சி.பி.ஐ அதிகாரிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகின்றனர். இது வரை ஒரு சாட்சி கூட கிடைக்கவில்லை. 

சம்பவம் நடந்த குந்தா கிராமத்தில் தகவல் சேகரிப்பு மையம் ஒன்றையும் சி.பி.ஐ. திறந்துள்ளது. தகவல் அளிப்பதற்காக தொலை பேசி எண், இ.மெயில் முகவரி போன்றவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கொலை நடந்த போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் என்ற தகவலின் பேரில் பலரை அதிகாரிகள் கிராமத்தில் தேடிச்சென்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். ராஜபையாவுக்கு பயந்ததே அவர்கள் சாட்சி சொல்ல மறுத்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

குந்தா கிராமத்தில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட மோதலில் கிராமத்தலைவர் நாங்கே யாதவ் கொல்லப்பட்டார். இதையடுத்து டி.எஸ்.பி. ஜியா-உல்-ஹக் தலைமையில் போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது போலீசுக்கும் கிராம மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் டி.எஸ்.பி. ஜியா-உல்-ஹ்க கொல்லப்பட்டார். மேலும் நாங்கே யாதவின்  சகோதரர் சுரேஷ் யாதவும் கொல்லப்பட்டார். உள்ளூர் எம்.எல்.ஏ.யும் மாநில அமைச்சரும் ராஜபையாவிற்கு இக்கொலைகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கொல்லப்பட்ட நாங்கே யாதவுக்கும் ராஜபையாவுக்கும் முன்விரோதம் இருந்தது என்ற தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டையடுத்து ராஜபையா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு தவிர மேலும் 16 வழக்குகள் அவர் மீது  உள்ளது. 

இதனிடையே உல்-ஹக் கொல்லப்பட்டது மதம்சார்ந்த பிரச்சினை அல்ல என்று தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாகத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்