முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. பொது வேலை நிறுத்தத்தை ஆதரிக்க முடியுமா?

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.12 - காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருக்கும்போது பொதுவேலை நிறுத்தத்தை ஆதரிக்க முடியுமா? என்று கம்யூனிஸ்டுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12-ம் தேதி (இன்று) டெசோ அமைப்பின் சார்பில் பொதுவேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், இடது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் டெசோ அமைப்பின் அழைப்பை ஏற்க முடியாது என்றும், பொது வேலை நிறுத்தத்தை ஆதரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். 

இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. இதுபற்றி உயர்மட்ட அளவில் நம்பத்தகுந்த மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாகியிருக்கும் நிலையில் பொது வேலை நிறுத்தத்திற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? இவ்வாறு அவர் கூறினார். 

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சி.மகேந்திரன் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. பங்கு வகித்தபோது, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை தடுத்து நிறுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை.

நாங்கள் இந்த பொது வேலை நிறுத்தத்தை ஆதரிக்க முடியாது. தமிழர்களை காப்பாற்ற ஏதேனும் செய்திருக்க முடியும் என்ற நிலையில் இருந்தபோது தி.மு.க.வினர் எதுவும் செய்யவில்லை. இந்த பிரச்சினை பற்றி இப்போது கூக்குரல் எழுப்புவதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago