முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் மத்தியஅரசு சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை:

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 13 - நிலக்கரி சுரங்க உரிமங்கள் வழங்கியதில் மத்திய அரசு சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதையும் மிஞ்சும் அளவுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ. ஒரு லட்சத்தை 86 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த உரிமம் வழங்கப்பட்டபோது நிலக்கரி சுரங்கத்துறையானது பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அதனால் இந்து மெகா ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய பாராளுமன்றத்தில் பா.ஜ. உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் கடந்த பாராளுமன்ற கூட்டம் முடங்கிப்போனது. இந்தநிலையில் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியது குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ.நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசானது சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை. கடந்த 2006-2009-ம் ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்ட கம்பெனிகளின் நம்பகத்தன்மை குறித்து எந்தவித ஆய்வையும் மத்திய அரசு செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கம்பெனிகளுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கம்போது கம்பெனிகளின் தராதரம் குறித்தும் அவைகள் பெரிய நிறுவனங்களா அல்லது சிறு சிறுவனங்களா என்பது குறித்தும் பகுத்தறியப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு, நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த இந்த அறிக்கை குறித்து அரசியல் ரீதியான நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சி.பி.ஐ. பிரமாண வாக்குமூலம் அளித்து உறுதி செய்யும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையில் சி.பி.ஐ.யின் இந்த அறிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சி.பி.ஐ.யின் இந்த அறிக்கை இறுதியானது அல்லது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் நிலக்கரி சுரங்க உரிமம் பெற பெரிய பெரிய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தும் சிறு சிறு நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வியும் எழுப்பியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்