முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடதுசாரிகளுக்காக பிரச்சாரம் செய்வேன் - சோம்நாத் சாட்டர்ஜி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

பீர்பூம்(மே.வங்.),ஏப்.24 - கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்ட பிறகு ஒருவித மனக்கசப்போடு இருந்து வந்த முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தற்போது அந்த உணர்வை பின்னுக்கு தள்ளி விட்டு கம்யூனிஸ்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார். இது குறித்து பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதாவது, 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இ. கம்யூனிஸ்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். காரணம், நான் இன்னமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரன்தான். அப்படித்தான் உணர்கிறேன். ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப் போவதாக மம்தா பானர்ஜி சொல்கிறார். ஆனால் அவர்களது திட்டம் என்ன என்பதை சொல்லவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 6 கட்ட தேர்தலில் இதுவரை 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல்கள் பாக்கியுள்ளன. இந்த நிலையில் சோம்நாத் சாட்டர்ஜி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். குறிப்பாக, பிரகாஷ் காரத் அதுபோன்ற அழைப்பை விடுத்தார். அந்த அழைப்பை தற்போது சோம்நாத் சாட்டர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட போது அதை எதிர்த்து இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். ஆனால் அந்த நிலையிலும் சோம்நாத் சாட்டர்ஜி தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நாள் முதல் இன்று வரை தீவிர அரசியலில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது தேர்தல் நடப்பதால் கம்யூனிஸ்டு தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆரம்பத்தில் மவுனமாக இருந்த சாட்டர்ஜி தற்போது தனது மனக்கசப்பை எல்லாம் மூட்டை கட்டி விட்டு கம்யூனிஸ்டு கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தயாராகி விட்டார். அநேகமாக இன்று முதல் அவரது பிரச்சாரம் தொடங்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago