முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேம்பாலம் - உயர்மட்ட பாலப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - சென்னை வியாசர்பாடி, மூலக்கடை, எண்ணூரில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-   

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வியாசர்பாடியில் ரூ.80.68 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் சாலை மேம்பாலம், மூலக்கடை சந்திப்பில் ரூ.49.55 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் சாலை மேம்பாலம் மற்றும் எண்ணூர் முகத்துவாரத்தில், எண்ணூர் அதிவேக சாலையை வடசென்னை அனல்மின்நிலையத்துடன் இணைக்கும் வகையில் ரூ.52.66 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப்பணிகளை நேற்று (13.3.2013) நேரில் ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர். குப்பன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை- கொல்கத்தா சாலையில், வியாசர்பாடியில் இரயில்வே கீழ்ப்பாலத்திற்கு பதிலாக சாலை மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.80.68 கோடி மதிப்பீட்டில் ரயில்வே துறையுடன் இணைந்து செயலாக்கப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி, பாலப்பணிக்கு இடையூறாக இருக்கும் வடிகால் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பாலப்பணியில் மொத்தம் 65 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2013-ல் பாலத்தின் மொத்த பணிகளை முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.என்.டி சாலை, மூலக்கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏதுவாக ரூ.49.55 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இதில் அடிதளப்பணி 60 விழுக்காடு முடிவடைந்துள்ளது. பயன்பாட்டு பக்கச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மொத்தப்பணியில் 21 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் ஓராண்டு காலத்தில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூர் அதிவேக சாலையை வடசென்னை அனல்மின் நிலையத்துடன் இணைக்கும் வகையில், எண்ணூர் முகத்துவாரத்தில் ரூ.52.66 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப்பணிகள் 80 விழுக்காடு முடிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டப்பாலம் 31.10.2013-ல் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டப்பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் திருவொற்றியூரிலிருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் குறைந்த தூரத்தில் விரைவாக போக்குவரத்து நெரிசலின்றி சென்றடையலாம்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி நடைபெற்றுவரும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க மேற்படி பணிகளின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago