முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மருவத்தூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் 4 நாட்கள் ரத்து

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - பராமரிப்பு பணிகள் காரணமாக மேல்மருவத்தூர்- விழுப்புரம்  பயணிகள் ரயில்கள் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு- திண்டிவனம் பாதையில் செல்லும் ரயில்களின் சேவை நேரம் வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் வரை மாற்றி அமைக்கப்பட உள்ளது. 

வருகிற 15, 16-ந் தேதிகளில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மதியம் 2.40 மணிக்கு வந்து சேரும் மதுரை- சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒலக்கூரில் நிறுத்தி வைக்கப்பட்டு 100 நிமிடம் தாமதமாக எழும்பூர் வந்து சேரும். எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்- திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். மாலை 5.50 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய திருச்சி- சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒலக்கூரில் நிறுத்தி வைக்கப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.   

இதேபோன்று 18-ந் தேதி எழும்பூரில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 130 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். பிற்பகல் 3.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர்- திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக விழுப்புரம் சென்றடையும். திருச்சி- சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 5.50 மணிக்கு எழும்பூர் வருவதற்கு பதில் 100 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். திருப்பதி- புதுச்சேரி பயணிகள் ரயில் மேல்மருவத்தூர்- புதுச்சேரி இடையே பகுதி நேர நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மேல்மருவத்தூர்- விழுப்புரம் பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்