முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் சண்டை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஏப்.24 ​ திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 13ந்தேதி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி அருகே உள்ள சாரநாதன் கல்லூரியில் மாநகருக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும், திருச்சி அடுத்த சமயபுரம் பக்கமுள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் புறநகரில் நடந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அங்குள்ள போலீசார் வண்டியிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளர்களும் ஏதாவது தில்லுமுல்லு நடந்து விடுமே என்ற நோக்கத்தில் அவர்களும் பாதுகாப்புக்காக ஆட்களை வாத்துள்ளனர். இங்கு தினமும் உயர் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் சரியாக பணியில் உள்ளனரா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். 

இப்படி இருக்கும் வாக்குகள் என்னும் பணிக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் நேற்று அங்கு பாதுகாப்பு இருந்த இரண்டு போலீசார் திடீரென தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் வாகனத்தில் இரண்டு போலீசார் சண்டையிட்டுக்கொண்டு இருவரும் கீழே விழுந்து மல்லுக்கட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்த அங்கு கூடுதல் பாதுகாப்புக்காக இருந்த மற்ற போலீசார் அங்கு தகராறில் ஈடுபட்ட போலீசார்களை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஓய்வு நேரத்தில் வாக்குவாதம் செய்து கொண்டு, வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். 

வாக்குப்பதிவு பெட்டிக்கு காவலுக்கு வந்த போலீசாரே இப்படி சண்டையிட்டு கொண்டால் அங்குள்ள வாக்குப்பெட்டிகளை யார் பாதுகாப்பது என்று அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் முனுமுனுக்கின்றனர்.

வாக்கு என்னும் மையத்தில் திடீரென ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்