முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கு: விசாரணையை மாற்ற அன்புமணி மனு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 15 - மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கினை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அவர் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்த வழக்கு விசாரணை, லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். 

அதில், ஏற்கனவே தன் மீது இதேபோன்ற மற்றொரு வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருவதால், இந்த வழக்கையும் அங்கு மாற்றுமாறு கூறியுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் பி.சதாசிவம், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago