முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகரில் நடந்த தாக்குதல்: பார்லி.,யில் கடும் அமளி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 15 - ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து நேற்று லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. லோக்சபா கூடியதும் நேற்று ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ்ஈடுபட்டன. பா.ஜ.க. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து இந்த விவகாரம் குறித்து அவைக்கு வராத உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிக்கை விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில்,

ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதும் அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு நம் கடமை முடிந்து விட்டதா? அவர்கள் இங்கு வந்து நம் வீரர்களின் தலையை துண்டித்து விட்டு செல்கின்றனர், விளையாட்டு வீரர்கள் போன்று வந்து தாக்குதல் நடத்துகின்றனர். இது இன்னும் எத்தனை காலம் தொடரும் என்றார்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ஷிண்டேவும் உடனே அவைக்கு வர வேண்டும் என்று கூறியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் பா.ஜ.க உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கோஷமிட்டனர். ஷிண்டே மதியம் வந்து அறிக்கை தருவார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத் உறுதியளித்த பிறகே அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்