முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - சாலை விபத்தில் பலியான 3 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தனது மகள் ரோகிணியுடன் 2.3.13 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் கள்ளிக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது மாநகர அரசுப் பேருந்து மோதியதில், ரோகிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் கிராமம், உத்தமர்கோவில் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது 5.3.13 அன்று அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம்  செய்த ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் வெள்ளியங்கிரி மற்றும் சின்னுசாமி என்பவரின் மகன் மணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த ரோகிணி, வெள்ளியங்கிரி மற்றும் மணி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்த ரோகினி, வெள்ளியங்கிரி மற்றும் மணி ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம்  ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா  அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago