முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் தாக்கி பலியான வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்கியதில் பலியான  மதுரையைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாள் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், பெமினா பகுதியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது 13.3.13 அன்று தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படைவீரர் பெருமாள் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பெருமாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பாதுகாப்புப் படைவீரர் பெருமாள் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்குரிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், பெருமாள் உடல் மீது மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துமாறும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுமாறும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பெருமாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்