முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத தாக்குதல்: மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் பலி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், மார்ச். 15 - ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை முகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பெமினா பள்ளி அருகே ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள்(31) என்பது தெரிய வந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லிங்கம் என்பவரின் மகன் ஆவார். அவரது தாய் கிருஷ்ணவேணி. பெருமாளுக்கு ஞானபிரகாஷ், மகேஷ் என்ற 2 தம்பிகளும், ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற 2 தங்கைகளும் உள்ளனர். பெருமாளுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

சிறு வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட பெருமாள் கடந்த 2010 ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். அவர் ஸ்ரீநகர் 73 வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago