முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில காங்., தலைவர்களுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.15 - ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஒரு சுய மதிப்பீட்டு மனுவை பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும். அதில் அவர் தனது நிலைமை என்ன என்பதை விவரமாகத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாநில காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் ஒரு மாநில தலைவர் கொடுக்கும் மனுவில் அவர் எப்படிப்பட்டவர், அவரது தகுதி என்ன, அவரது மதிப்பீடு என்ன என்பதையும், அவர் மாநில தலைவர் பதவியில் நீடிக்கலாமா அல்லது அவரை நீக்கிவிடலாமா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கட்சியில் அவரது திறமை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள இது உதவும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இந்தத் திட்டம் மூலம் ஒருவரின் தரம் என்ன என்பதையும், அவர் செயல்படுகிறாரா இல்லையா என்பதை  அறிந்துகொள்ள முடியும்.        

நன்றாக செயல்படுபவர்களுக்கு பச்சை, மஞ்சள் நிறமும், செயல்படாதவருக்கு சிவப்பு நிறமும் கொடுக்கப்படும். 

இந்த சுய மதிப்பீட்டு மனுவில் கட்சியில் அவர் அடிமட்டத்திலிருந்து, 3 மாதங்களாக கட்சியின் தரத்தை எவ்வாறு உயர்த்தியுள்ளார் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற, இடைத்தேர்தல்களில் அவர் எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். 

அவர்களது மாநிலங்களில் உள்ள அரசியல், பொருளாதார நிலை, உள்கட்சித் தகராறு, தகராறு செய்பவர்களை சமாளித்த விதம் பிரச்சினைகள் பற்றி தெரிவிக்க வேண்டும். ராகுல்காந்தியிடம் இந்த மனுவை சமர்ப்பிக்கும் முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். இதன்பிறகு ராகுல்காந்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்