முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., சிறையில் மடிந்த இந்தியரின் உடல் காஷ்மீர் வந்தது

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, மார்ச். 15 - சட்டவிரோதமாக எல்லையை கடந்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இந்தியரின் உடல் 2 மாத காலத்திற்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஷாமல்சிங்(40). கடந்த 2008 ம் ஆண்டு சட்டவிரோதமாக எல்லையை கடந்ததாக ஷாமல்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2010 ம் ஆகஸ்ட் மாதம் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஷாமல்சிங் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி சிறையில் மரணமடைந்தார். 

பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்த ஷாமல்சிங்கின் உடலை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது மகன் மற்றும் உறவினர்கள் இரு நாட்டு அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு ஷாமல்சிங்கின் உடலை ஒரு ஆம்புலன்சு மூலம் ஜம்மு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. பிரேத பரிசோதனைக்கு பின் ஷாமல்சிங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையின் உடலைப் பெற்றுக் கொண்ட தீபக்சிங் கூறுகையில், 

எனது தந்தையின் உடலை ஜம்முவுக்கு கொண்டு வர இந்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் தக்ஷீன் கான் என்பவர் கூறுகையில், இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக  ஷாமல்சிங் கொல்லப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்ததாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்