முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தூதரை அழைத்து பிரதமர் கண்டனம் தெரிவிக்க கடிதம்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.15 - மீனவர் பிரச்சினையில் இலங்கை தூதரை அழைத்து பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரத்திலிருந்து 9 இயந்திர படகுகளில் 53 மீனவர்கள் மார்ச் 13-ம் தேதி அன்று மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர். இது இலங்கை கடற்படையினர் சமீபத்தில் நடத்திய இரண்டாவது கைது நடவடிக்கையாகும். தமிழக மீனவர்களுக்கு குறுகிய பாக்ஜலசந்தியில் மீன் பிடிப்பதை தவிர வேறு மாற்று வழியில்லை. மேலும் வரையறுக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லைக்கோடு தமிழக அரசின் ஒப்புதலுடனோ மீனவர்களின் ஒப்புதலுடனோ செய்யப்படவில்லை.

இருநாடுகளுக்கு இடையே உள்ள மீன் பிடிக்கும் பிரச்சினைகள் படைபலத்தின் மூலமோ மீனவர்களை குற்றவாளிகளாக நடத்துவதின் மூலமோ அவர்களை கைது செய்து அச்சுறுத்தி தாக்கி துப்பாக்கியால் சுடுதலின் மூலமோ தீர்த்துவிட முடியாது. பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் தமிழக மீன்வர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அராஜகம் செய்வது வருத்தமான சூழ்நிலையை உண்டாக்குகிறது. 

என்னுடைய தலைமையிலான தமிழக அரசு சர்வதேச எல்லைக்கோடு மற்றும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கும் மீனவர்களை தடுப்பது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்திய அரசும் எதிர்ப்பை காட்டவேண்டும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். உங்களுடைய மெளனத்தைக் கண்டு இலங்கை அரசு துணிச்சல் அடைந்து அதை பலவீனத்தின் அடையாளமாகவும், மீனவர்கள் மீது நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாகவும் கருதிவிடக் கூடாது. 

நீங்கள் உடனடியாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது மற்றும் வன்முறை, சமீபத்தில் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்தும் புகார்களை பதிவு செய்யவேண்டும். மேலும் இலங்கை அரசு கைது செய்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீது எந்த வழக்கையும் போடக்கூடாது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கைது மற்றும் வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வற்புறுத்தவேண்டும். 

இலங்கை அரசின் அதிகபிரசங்கித்தனமான நடவடிக்கை குறித்து என்னுடைய வலுவான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago