முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச். 16 - ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் பெருமாளின் உடல் சொந்த ஊரான பேரையூரை அடுத்த தும்மநாயக்கன்பட்டியில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

கடந்த புதன்கிழமையன்று ஜம்மு - காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் பெருமாளின் உடல் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் அவரது உடல், தென் மண்டல மத்திய பாதுகாப்புப் படையின் உயரதிகாரி ஓம் பிரகாசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவரது உடலுக்கு பாதுகாப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெருமாளின் உடல் வேன் மூலம் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுரையில் அவரது உடலை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், பெருமாளின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் சொந்த ஊரானா பேரையூரை அடுத்த தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. உயிரிழந்த பெருமாளுக்கு, வரும் ஜூனில், திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்காக, பெற்றோர் பெண் பார்த்து வைத்திருந்தனர். ஜூனில் விடுமுறைக்கு வந்தவுடன், நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதற்கு முன்னதாகவே தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்து விட்டார் பெருமாள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்