முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தல்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.16 - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியது. பாராளுமன்ற ராஜ்யசபையில் நேற்று அ.தி.மு.க. குழுத்தலைவர் மைத்ரேயன் எழுந்து இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை குறித்து பேசினார். இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனீவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். அப்படி ஆதரிக்காவிட்டால் வரும் 22-ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமாகும் என்றார். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் சிவா கூறினார். இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதனால் போர்க்குற்றத்தை கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலை என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் சிவா கேட்டுக்கொண்டார். 

இதற்கு பதில் அளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருப்பது குறித்து மத்திய அரசு சரிநிகராக கவலை கொண்டுள்ளது. சபையின் உணர்வை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எடுத்துரைப்பேன் என்றும் ராஜீவ் சுக்லா மேலும் கூறினார். சிறையில் இருக்கும் ஓம் பிரகாஷ் செளதாலாவை எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்று இந்திய தேசிய லோக்தளம் உறுப்பினர் ரன்பீர் சிங் குற்றஞ்சாட்டினார். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் உறுப்பினர் பி.சி.குப்தா ஆதரித்து பேசினார். சிறையில் இருக்கும் தலைவர் ஒருவரை எம்.பி.க்கள் பார்க்க அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்றார். ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற செளதாலா மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்