முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறு சோழகர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 - காவேரி டெல்டா விவசாயிகள் சங்க குழுமத்தின் தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் திருவையாறு நவரோஜி சோழகர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவேரி டெல்டா விவசாய சங்க குழுமத்தின் மாவட்டத் துணை தலைவரும், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், கடம்பம்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவருமான திருவையாறு நவரோஜி சோழகர் 14.3.13 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

திருவையாறு நவரோஜி சோழகர் காவேரி டெல்டா விவசாயிகளின் உரிமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவரது மறைவு காவேரி டெல்டா சங்க குழுமத்திற்கும், காவேரி டெல்டாபகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திருவையாறு நவரோஜி சோழகரை இழந்துவாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், காவேரி டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago