முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14130 பள்ளிகளில் ரூ.360 கோடி செலவில் வைப்பறைகள்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 - தமிழகம் முழுவதும், சத்துணவு வழங்கப்படும் 14 ஆயிரத்து 130 பள்ளிகளில் புதிதாக வைப்பறைகள் அமைக்க ரூ.360 கோடி நிதிஒதுக்கி, ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-​

 ஜனநாயகத்தின் நாளைய  தூண்களாக விளங்க உள்ள குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்துடன் வளர்க்கப்பட்டால் தான் அவர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டை நன்முறையில் வழிநடத்திச் செல்லும் வலிமை மிக்க தலைமுறையினராக உருவெடுப்பார்கள் என்பதன் அடிப்படையில்  தமிழகத்தில் உருவாக்கப்பட்டது தான்  சத்துணவு திட்டமாகும்.  

இதுதவிர அங்கன்வாடி மையங்கள் மூலம் இணை உணவு சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு முட்டை ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும்  அளிக்கப்படுகின்றன. மேலும் இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள் முதியோர்கள் ஆகியோருக்கு புரத சத்து மிக்க சத்தான சூடான மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.  

தற்போது தமிழகம் முழுவதிலும் உள்ள 54 439 அங்கன்வாடி  மையங்களுக்கு  தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர்  இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு  சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.

 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தங்கு தடையின்றி நாள்தோறும் ஊட்டசத்துடன் கூடிய தரமான உணவு வழங்குவதற்காக பயன்படுத்தப்படும்  அரிசி பருப்பு முட்டை பழங்கள்  போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து வைப்பதற்கு வைப்பறையுடன் கூடிய சமையலறை ஒவ்வொரு பள்ளியிலும்  அமைக்கப்பட வேண்டியது  மிகவும் அவசியம் ஆகும்.  

எனவே  முதற்கட்டமாக 14 340 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.  மேலும் 7 650 பள்ளிகளில் வைப்பறையும் சமையலறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

  தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வைப்பறையுடன்  கூடிய சமையலறை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மேலும்  14 130 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய  சமையலறைகள் கட்டும் பணிகளுக்காக   359 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்