முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆட்சியின் சாதனை

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மார்ச்.16  - உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவிஏற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி ஆட்சி பற்றியும் அதன் சாதனைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அது முன்னர் கூறிய 

உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. அங்கு நடைபெறும் ஆட்சி தினமும் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்து வருகிறது. 

புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை. சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்டு பலர் பேசினர். மெளரியா என்பவர் பேசும்போது, மாநிலத்தில் நடைபெற்றுள்ள குற்றச் செயல்களைப் பட்டியலிட்டார். இந்த மாநிலத்தில் குண்டர்கள் சாம்ராஜ்யம் நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மாநில குற்றப்பிரிவு ஆவணக்காப்பகம் வழங்தியுள்ள தகவலின்படி பகுஜன் சமாஜ்வாடி கட்சி சிறந்த ஆட்சியைத் தந்ததாகக் கூற முடியாது.

 2011-ம் ஆண்டு 2878 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சமாஜ்வாடி கட்சி ஆட்சியின்போது இது 2652 ஆகக் குறைந்துள்ளது.இந்த இரு கட்சிகளும் ஆண்டுவந்த காலத்தில் அதாவது 2011-ல்   108 பாலியல் பலாத்கார சம்பவங்ளும், 29012-ம் ஆண்டில்  90 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவாகியுள்ளன. லக்னோவில் ஒரு மருத்துவர் கொலை செய்யப்பட்டார். லக்னோவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். சிறையில் மருத்துவ அதிகரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். பகுஜன் சமாஜ் தட்சி ஆட்சியில் பல சம்பவங்கள் நடந்தன. குற்றச் செயல்களில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள ன. சமாஜ்வாடி கட்சி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. 

அகிலேஷ் யாதவ் ஆட்சியில் வெற்றி ஊர்வலத்தில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், மருத்துவ அதிகாரியை அமைச்சர் ஒருவர் கடத்தியது, போலீஸ் அதிதாரி ஒருவர் இறந்ததில் அமைச்சர் ராஜிநாமா செய்தது போன்றவற்றை முதலவர் சிகித்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 12 சாதிக் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. மனித சக்தி அதிகரித்துநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதெல்லாம் புதிய சீர்திருத்தங்கள் என்று முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூறினார்.

இவையெல்லாம் இருந்தபோதிலும்கூட சில நல்ல பணிகளும் நடைபெற்றுள்ளன. பெண்களுக்கு எதிரான 67 ஆயிரம் புகார்களில் 40 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் அரிதாக நிகழ்ந்துள்ளன. போலீஸார் மீதான தாக்குதல் அரசுக்கு சவாலாக உள்ளது.

டிஎஸ்பி ஜியாவுல்ஹக், போலீஸ்காரர் உமேஷ்குமார், சப்இன்ஸ்பெக்டர் ஓம்வீர் ஆகியோர் மரணம் கவலை அளிப்பதாக உள்ளது. கட்சி தொண்டர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்