முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் பாத யாத்திரைக்கான பதிவு நாளை துவங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, மார்ச்.17 - அமர்நாத் வருடாந்திர பாதயாத்திரைக்கான பதிவு இம்மாதம் 18-ம்தேதி தொடங்குகிறது. பல்டால், சந்தான்வாரி ஆகிய வழிகளில் செல்வதற்கான வசதிகள் துவங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ் பேங்க், எச்.டி.எப்.சி. வங்கி ஆகிய வங்கிகளின்  422 வங்கிக் 

கிளைகளிலும் பதிவு செய்யலாம் என்று ஸ்ரீஅமர்நாத் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி நவீன் சவுத்ரி தெரிவித்தார்.

55 நாள் நடைபெறும் இந்த பாதயாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 21-ம்தேதி நிறைவு பெறும். இதை பதிவு செய்ய யாத்ரீகர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் இந்த போர்டின் இணைய தளத்தில் வெளிவரும். அதில் பதிவு செய்தவர்களின் மனு, விலாசம், அந்தந்த மாநிலங்களில் பதிவு செய்த வங்கிகளின் விவரம் தெரிவிக்கப்படும்.இதுபற்றி ஸ்ரீஅமர்நாத் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி நவீன் சவுத்ரி கூறியதாவது: 

இந்த யாத்திரை தொடர்பாக பதிவு செய்பவர்கள் முதலில் அவர்களது உடல்நிலை பற்றிய சான்றிதழை தர வேண்டும். இதில் டாக்டர்கள் அல்லது நிறுவனம் பற்றிய தகவல் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். மார்ச் மாதம் 1-ம்தேதிக்குப் பிறகு வழங்கப்படும் சான்றிதழ்கள் மட்டும் இந்த யாத்திரையில் ஏற்றுக்கொள்ளப்படும்.  

13 வயதுள்ள சிறுவர்கள், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 6 மாதம் கர்ப்பமடைந்த கர்ப்பிணிகள் இந்த யாத்திரையில் பதிவு செய்ய முடியாது.

இந்த ஆண்டு யாத்திரை செல்பவர்களுக்கு ஒவ்வொரு வாரத்திலும்   கிழமைகள் மாறுபடும். பல்டால் மற்றும் சந்தன்வாரி ஆகிய  பகுதிகளில் யாத்திரை செல்லும் வழிகளில் போலீஸார் நியமிக்கப்படுவார்கள். போதிய அனுமதி இல்லாமல் யாத்திரை மேற்கொள்பவர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்