முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முன்னேறுகிறது: ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

மெக்சிகோ, மார்ச். 17 - பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020 ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். 

தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990 ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008 ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்