முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய்அருண் பெருமாள் கோவிலில் தரிசனம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.17 - திரைப்பட நடிகர் விஜய்அருண்குமார் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.ஹ திரைப்பட நடிகரும், நடிகர் விஜயகுமாரின் மகனுமான விஜய்அருண்குமார் நேற்று மதுரை வந்தார். நேற்று அதிகாலை மதுரை கூடழகர் பெருமாள் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் வெளியில் இருந்த ஏழைகளுக்கு அன்னதானத்தை வழங்கினார். தரிசனம் முடித்து பின் அருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது, நான் தற்போது டீல் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் காமடி, ஆக்சன் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது. ஒரு கார் ரேசிங் மட்டும் தேனி பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் 75லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார்.

    தற்போது எனது சொந்த தயாரிப்பு படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.இதனால் அதிக படம் கொடுக்க முடியவில்லை. இனி வெளிப்படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதனால் வருடத்திற்கு 2 படங்கள் கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் சுப.கனவேலாயுதம் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்