முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.18 - 20-ம் தேதி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய நாடுகள் அவையில் வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் தமிழக மாணவர்கள் மார்ச் 20-ம் தேதி ஒவ்வொரு மாவட்டங்களிலும், தலைநகரிலும் மாபெரும் மாணவர்கள் ஒன்று கூடலுக்கும், தொடர் முழக்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். 

இன அழிப்பு போர்க்குற்றம், சர்வதேச விசாரணை ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இந்தியா முன்மொழிந்து இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago