முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்: ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ஆலப்புழை, மார்ச். 18 - அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு வழங்கும் மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் அதை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள அரசு டி.டி. மருத்துவக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது, 

நம் நாட்டில் அரசு வழங்கும் மருத்துவ வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் பெருகி வருகின்றன. எனினும் இது இன்னமும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை. எனவே இந்த சேவையை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 

குறிப்பாக, தரமான சிறப்பு மருத்துவ சேவைகளை பெறுவதற்காக தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. சிலர் மருத்துவ செலவு காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளநர். அதிக செலவு காரணமாக சிறப்பு மருத்துவ சிகிச்சை யாருக்கும் மறுக்கப்பட கூடாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான விலை மலிவான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கு சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்